உயர் கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்: துணைவேந்தர்கள் மாநாட்டில் சிசோடியா பேச்சு

புதுடெல்லி: உயர்கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்களை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். இந்திய பல்கலை கழகங்கள் ஏற்பாடு செய்த வடக்கு மண்டல துணைவேந்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டெல்லி கல்வித்துறை அமைச்சரும் துணை முதல்வருமான சிசோடியா கலந்து கொண்டார். அப்போது, இந்த கூட்டத்தில் சிசோடியா நிகழ்த்திய தனது உரையில், கல்விக்கும் மனிதவள மேம்பாட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வலியுறுத்தி பேசினார். சிசோடியா தனது உரையில் மேலும் கூறியதாவது:  மனித வள மேம்பாடு என்பது கல்வியின் வெறும் கரு மட்டுமே. அதுவே கல்வியின் அடித்தளம் அல்ல. நம் குழந்தைகள் இந்த உலகத்திற்கான வெறும் கருவிகளாகவோ அல்லது உபகரணங்களாகவோ கருதப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது தான் கல்வியின் பங்கு மற்றும் பொறுப்பாகும். கோவிட் உயர் கல்வியை பொறுத்தவரை, தொற்று பரவலுக்கு பின் பல்கலை கழகங்களும், கல்வியாளர்களும் ஒரே மாதிரியாக எதிர்கொள்ளும் சில சவால்கள் உள்ளன.

 குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எங்களுக்கு முதல் சவாலே அதிகளவிலான எண்ணிக்கையை பற்றி கூறலாம். இதற்காக  கல்வி உரிமை சட்டம் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதன்மூலம் எல்லா குழந்தைகளும் பள்ளியில் சேருவதை உறுதிசெய்தோம். பெருமளவில் பட்டதாரிகளை உருவாக்கினோம். ஆனால் அதன்பின்னர், நான் எங்கே செல்ல வேண்டும்? நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று குழந்தை கேட்கிறது. ஆனால், அதற்கான பதில் எங்களிடம் இல்லை. ஒரு குழந்தை அடையக்கூடிய அதிகபட்ச வெற்றியை நம்மால் தீர்மானிக்க முடியாது, ஆனால் தரமான கல்விக்கான குறைந்தபட்ச வரம்புகளை நாங்கள் தீர்மானிக்க முடியும். மாணவர்களிடம் தொழில் முனைவோரை பற்றி பேச வேண்டும். எங்கள் பல்கலை கழகஙகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய பலர் 2000 பேருக்கு வேலை தரும் நிலையை உருவாகியுள்ளனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு பல்கலை கழகங்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. திறமையானவர்களை பல்கலை கழகங்கள் தான் கண்டறிய வேண்டும். ஒரு தேசமாக, நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உழைக்கிறார்கள் என்றால் நாம் தோற்றுபோய் விட்டோம் என்று தான் அர்த்தம். இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

Related Stories:

>