காதலை ஏற்க மறுத்த சிறுமி குத்திக்கொலை: 25 வயது வாலிபர் கைது

புதுடெல்லி:காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 25 வயது வாலிபர் 15 வயது சிறுமியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினரகிழக்கு உத்தரபிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் சுனில் யாதவ். இவர் சமீபமாக சூரஜ்பூரில் உள்ள வாடகை வீட்டிற்கு குடும்பத்தினருடன் குடி பெயர்ந்தார். அதே வளாகத்தில் வசித்த 15 வயது சிறுமியை ஒரு தலையாய் காதலித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று சிறுமியின் வீட்டில் இருந்த தந்தை மூத்த சகோதரர் மற்றும் மைத்துணி அனைவரும் வேலைக்காக வெளியில் சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பியபோது, இரண்டாவது மாடியில் இருந்த காலி அறையில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தாள். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்த போலீசாரின் விசாரணையில், சுனில் யாதவ் மீது சந்தேக கண் விழுந்தது. அவரை அழைத்து போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணமாக பேசியதால் சுனில் மீதான சந்தேகம் அதிகரித்தது.

இதையடுத்து போலீசாரின் முறையான விசாரணைக்கு பின்னர் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.சிறுமியுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள கடந்த காலத்திலும் சுனில் முயன்றுள்ளார். ஆனால், சுனிலின் காதலை ஏற்க சிறுமி மறுத்துவிட்டதால் ஆத்திரத்தில் இந்த கொலையை செய்துள்ளார் என மத்திய நொய்டாவின் துணை கமிஷனர் ஹரிஷ் சந்தர் தெரிவித்தார். இதையடுத்து சுனிலை சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>