மின் திருட்டு 16.2 லட்சம் இழப்பீடு வசூல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 14,87 லட்சம் இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச கூடுதல் தொகை 1.33 லட்சத்தை செலுத்தினர். இதனால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>