ஏப்ரல் இறுதியில் நடத்த திட்டம்: தமிழக, புதுவை தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு குறித்து கடந்த 10,11ம் தேதிக ளில் தமிழகத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ, ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, மாநில அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 2 நாட்கள் தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, ‘தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, புதுவைக்கு சென்ற இக்குழு அம்மாநிலபேரவை தேர்தல் ஏற்பாடு பற்றியும் ஆய்வு செய்து விட்டு டெல்லி திரும்பியது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரிக்கான தேர்தல் தேதியை இந்த மாத இறுதியில் அறிவிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், கட்சிகளின் வேண்டுகோளின்படி இம்மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

Related Stories:

>