கால்வாயில் பஸ் கவிழ்ந்து 47 பேர் பரிதாப சாவு: ம.பி.யில் சோகம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் 54 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை பேருந்து ஒன்று சென்றது. பாட்னா அருகே பாலத்தின் மீது பேருந்து வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தாறுமாறாக ஓடிய பேருந்து பாலத்தின் மேலிருந்து கால்வாயில் கவிழ்ந்தது. போலீசாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு கிரேன் மூலமாக பேருந்து கால்வாயில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

நீரில் மூழ்கிய 18 பேரின் சடலங்கள் முதலில் மீட்கப்பட்டது. பின்னர், மேலும் 29 பேரின் சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டது. பேருந்து விழுந்தவுடன் தப்பிய 7 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>