×

பாங்காங் ஏரியில் இருந்து சீன படைகள் வாபசாகும் ஆதாரம் வெளியீடு

புதுடெல்லி: பாங்காங் ஏரி பகுதியில் இருந்து சீனா ராணுவம் வீரர்களை வாபஸ் பெறுவது தொடர்பான வீடியோ, புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டது. கடந்த ஜூனில் இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இருநாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். 9 கட்ட பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.  இதன் எதிரொலியாக பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் உள்ள படைகளை சீனா வாபஸ் பெறத் தொடங்கி உள்ளது. இதேபோல், இந்தியாவும் தனது படைகளை திரும்ப பெற்று வருகிறது.

இந்நிலையில், சீன ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்படுவது தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. பாங்காங் ஏரி பகுதியில் இருந்த சீனாவின் முகாம்களை அகற்றுவது, பதுங்கு குழிகளை மூடுவது உள்ளிட்ட பணிகள் குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஏராளமான சீன வீரர்கள் மலைகளில் இருந்து கீழே இறங்கி வாகனங்களில் புறப்பட்டு செல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. ஏனினும், இது பாங்காங் ஏரியின் வடக்கு அல்லது தெற்கு கரை பகுதியா? என்பது குறிப்பிடப்படவில்லை.


Tags : withdrawal ,troops ,Chinese ,Pangong Lake , Pangong Lake, Chinese forces, retreat
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...