×

இங்கிலாந்து வைரசை தொடர்ந்து இந்தியாவில் தாக்கியது பிரேசில், தென்னாப்பிரிக்கா கொரோனா

புதுடெல்லி: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், பல்வேறு வகையான உருமாற்றங்களை கண்டு வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் இதுபோல் உருமாறிய கொரோனா மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இது தற்போது இந்தியா உட்பட 70 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, பிரேசிலில் நாடுகளில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரசும் தாக்க தொடங்கி உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 5 பேர், கண்டறியப்பட்டனர்.  

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘‘ஜனவரியில் தென்னாப்பிரிக்க கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 4 பேர் கண்டறியப்பட்டனர். அங்கோலாவில் இருந்து வந்த ஒருவர், தான்சானியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 3 பேருக்கும் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் பயணித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரேசில் நாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு அந்நாட்டின் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது,’’ என்றார்.


Tags : UK ,India ,Corona ,South Africa ,Brazil , England, South Africa, Corona
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...