×

சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் டாக்டர் பாபு தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் காது, கண், வாய், எலும்பு, நரம்பு என பல்வேறு சிறப்பு பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு, உத்திரமேரூர் வட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தும் உரிய  சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கினர்.

Tags : Specialty Medical Camp , Special, medical camp
× RELATED மதுரை நரசிங்கம்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்