மார்பிள் கற்கள் சரிந்து வாலிபர் பலி: லாரி டிரைவருக்கு வலை

சென்னை:  காஞ்சிபுரம் நல்லூரை சேர்ந்தவர் விஜய்(32). மார்பிள் கற்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விஜய், சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மார்பிள் கற்களை, ஆர்டரின் பேரில் லாரியில் கொண்டு வந்த மார்பிள் கற்கள் இறக்கினார்.

அப்போது திடீரென லாரி டிரைவர் வாகனத்தை இயக்கினார். இதில் கற்களை இறக்கி கொண்டிருந்த விஜய் மீது மார்பிள் கற்கள் ஒன்றின் பின் ஒன்றாக சரிந்து விழுந்தது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் தப்பிவிட்டார்.புகாரின்படி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>