குழந்தை மாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஒபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32).  தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதில் மூன்றரை வயது மூத்த மகன் ஜிஸ்வந்த்.

இந்நிலையில், நேற்று மாலை பிரியா, வீட்டின் எதிரே உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.

பின்னர் வீடு திரும்பியபோது, ஜிஸ்வந்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் ஜிஸ்வந்த் கிடைக்கவில்லை. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். ஆனாலும் சிறுவன் ஜிஸ்வந்த்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார், மாயமான சிறுவன் ஜிஸ்வந்தை தேடி வருகின்றனர்.

Related Stories:

>