மூத்த தலைவர் இல.கணேசனுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்த நாள், 52வது ஆண்டு பொது வாழ்வு தொடக்க விழாவை முன்னிட்டு பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு பாஜ தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜ மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் தலைமையில் விருகம்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயில், வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தாம்பரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது. இதே போல் தென்சென்னை மாவட்ட பாஜ துணை தலைவர் ஐ.கருப்பையா ஏற்பாட்டில் விருகம்பாக்கம் சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாலை 5.30 மணியளவில் மண்வாசனை அமைப்பு சார்பில் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளி அரங்கில் இல.கணேசன் கருத்தரங்கம் நடைபெற்றது.

Related Stories:

>