சித்தராமையா அனுமதித்தால் 2 லட்சம் தொண்டர்களுடன் காங்கிரசில் இணைவேன்: முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் தகவல்

கோலார்: முன்னாள்  முதல்வர் சித்தராமையா எப்போதும் எனது அரசியல் குரு என்பதில் மாற்று  கருத்தில்லை. அவர் அனுமதி கொடுத்தால் 2 லட்சம் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ்  கட்சியில் இணைய தயாராகவுள்ேளன் என்று முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ்  தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நடந்து  முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் ேகாலார் தாலுகாவில் 18 கிராம  பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் 12 பஞ்சாயத்துகளின் நிர்வாகம் எனது  ஆதரவாளர்கள் கை பற்றியுள்ளனர். 5 பஞ்சாயத்துகள் மஜதவும் ஒரு பஞ்சாயத்தை  காங்கிரசும் பிடித்துள்ளது. மஜத கைபற்றியுள்ள 5 பஞ்சாயத்துகளில்  அரபிகொத்தனூர் மற்றும் கோலனூர் ஆகிய இரு பஞ்சாயத்துகள் மட்டுமே மஜத  உண்மையாக பிடித்துள்ளது. மற்ற மூன்று பஞ்சாயத்துகளில் எனது ஆதரவாளர்களை  விலை கொடுத்து வாங்கி பிடித்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளாக தனியாக நான் அரசியல் செய்து வந்தாலும் எனது அரசியல் குரு எப்போதும் முன்னாள் முதல்வர்  சித்தராமையாதான். அவர் அடிச்சுவடியில்தான் நான் அரசியல் களத்திற்கு  வந்தேன். தற்போது எனக்கு 54 வயதாகி விட்டது. இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே  அரசியலில் இருப்பேன். கடைசி காலத்தில் தேசிய கட்சியில் இணைந்து மக்கள் சேவை  செய்ய தீர்மானித்துள்ளேன். அதனால் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு  செய்துள்ேளன். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங். தலைமை அனுமதி வழங்கினால், சுமார் 2 லட்சம் ஆதரவாளர்களுடன் மாநாடு  நடத்தி கட்சியில் இணைவேன்’’ என்றார்.

Related Stories:

More