ஆம்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்காமல் பிறந்த நாள் கொண்டாடிய ஊழியர்கள்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் அருகே நேற்று மதியம் ஒருவர் பைக்கில் சென்றார். அங்குள்ள வேகத்தடை மீது பைக் ஏறி இறங்கியதில் தவறி விழுந்த அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள இருக்கையில் அமர வைத்தனர்.

ஆனால் அங்கு டாக்டரோ, ஊழியர்களோ யாரும் இல்லை. அப்போது அருகே உள்ள ஒரு அறையில் உற்சாக கூச்சல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது பணியில் இருந்த ஊழியர்கள் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் சிகிச்சை அளிக்க கேட்டபோது சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று வைரலாக பரவியது. காயமடைந்தவரை கவனிக்காமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேக் வெட்டி அங்கிருந்த ஊழியர்கள் கொண்டாடியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>