×

இங்கிலாந்து பி டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் கிண்டல் டுவிட்.!!!

லண்டன்: 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் கிண்டலும் செய்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியைக் கிண்டல் செய்வதை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக, சென்னை நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 227 ரன்களில் தோல்வி அடைந்தது.

அப்போது, கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பீட்டர்ஸன், இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன் எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின்  அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன் நினைவிருக்கிறதா” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணி வாகை சூடியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துடன் கிண்டல் செய்தும், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இங்கிலாந்து பி டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என வெற்றியை ஏற்க முடியாமல் கிண்டல் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலியை, சுழற்சி முறை ஓய்வுக்காக நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் பீட்டர்ஸன் சாடியுள்ளார்.

அதில்,மிகவும் கடினமான சவாலான இடத்தில் டெஸ்ட் போட்டியில் வெல்ல சிறந்த அணியை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களால் உங்கள் உணர்ச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆஸி.க்கு எதிராக 2005-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸி.யை நாம் வென்றோம். அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் தோற்றத்தை மாற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணியின் பெயர் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டுமானால், சிறந்த அணியைத் தேர்வு செய்தால்தான் முடியும். மொயின் அலி ஒரு டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்புகிறார். வாவ் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : team ,Indian ,Peterson ,England ,England B , Congratulations to the Indian team that defeated the England B team: Former England captain Peterson teasing tweet. !!!
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...