×

செங்கம் நகரில் மர்ம ஆசாமிகள் அட்டூழியம்: கத்திவெட்டு காயத்துடன் திரியும் கோயில் மாடுகள்

செங்கம்: செங்கம் நகரில் கத்தியால் வெட்டப்பட்டும், வாகனத்தில் சிக்கியும் கோயில் மாடுகள் காயங்களுடன் சுற்றித்திரிகின்றன. இதை கோசாலையில் பராமரிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பிரசித்தி பெற்ற வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், ரிஷபேஸ்வரர் சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு பக்தர்கள் 100க்கும் மேற்பட்ட மாடுகளை நேர்த்திக்கடனாக விட்டுள்ளனர். இந்த மாடுகளை, கோயில் நிர்வாகம் சார்பில் சரியாக பராமரிக்கப்படாததால் அவைகள் தெருக்களிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றித்திரிகிறது. இரவு, பகல் எந்த நேரத்திலும் அவைகள் சாலைகளிலும், வீட்டின் முன்புற பகுதிகளிலும் படுத்துக்கொள்வது வழக்கம். இவ்வாறு சுற்றித்திரியும் கோயில் மாடுகளை சில சமூக விரோத கும்பல் கம்பால் அடித்து விரட்டுவதும், கத்தியால் வெட்டும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

மேலும் சில மாடுகள் திருடிக்கொண்டும் செல்கின்றனர். பல நேரங்களில் சாலையில் செல்லும் மாடுகள் வாகனத்தில் அடிபட்டு கால் உடைந்தும், உயிருக்கு போராடுகிறது. எனவே செங்கம் நகரில் நேர்ந்து விட்ட கோயில் மாடுகளை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கவேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Assamese ,Chengam , Temple cows
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை