சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்வையிட்டார் ரஜினி

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று பார்வையிட்டார். சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். இன்று நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Related Stories:

>