சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.! தமிழ் புலவராக மாறிய ஹர்பஜன்

சென்னை: சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 69.7 சதவிகிதத்துடன், 460 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் தற்போது சமநிலையில் உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தனது தமிழ் ட்வீட்களால் ரசிகர்களை கவர்ந்த இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்; சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.! அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.! மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.! பிசிசிஐ வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>