×

அரியானா மாநில பாஜக நிர்வாகியான நடிகையின் வீட்டில் நகை, துப்பாக்கி கொள்ளை

ஹிசார்: அரியானா மாநில பாஜக நிர்வாகியும், நடிகையுமான சோனாலி போகாட் வீட்டில், நகை, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்முவின் டோக்ரானி மொஹல்லாவில் வசிக்கும் பாஜக மகளிரணி தலைவரான நடிகை சோனாலி போகாட் (41), ரவி கிஷன், ஜிம்மி ஷெர்கில் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். டிக்டாக் வீடியோ வெளியிட்டு, தனது ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்துவார்.

இந்நிலையில், அவர் அரியானா மாநிலத்தின் ஹிசார் அடுத்த எச்.டி.எம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘கடந்த 9ம் தேதி எனது வீட்டைப் பூட்டிவிட்டு, சண்டிகருக்கு சென்றேன். நேற்று (பிப். 15) நான் சண்டிகரில் இருந்து ஹிசாருக்கு திரும்பினேஜ். ​வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டு கதவின் பூட்டுகள் உடைந்து கிடந்தன.

உள்ளே சென்று பார்த்த போது ​பூட்டப்பட்ட அலமாரியின் மேற்புறத்தில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள், கைக்கடிகாரங்கள், உரிமம் பெற்ற ஒரு ரிவால்வர் துப்பாக்கி, 8 தோட்டாக்கள் போன்றவை காணவில்லை. எனவே குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து எச்.டி.எம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சோனாலி போகாட் வீட்டின் பூட்டுகளை உடைத்து திருடர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கம், ரிவால்வர் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் குழுவும், தடயங்களை சேகரித்தது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றோம் என்றார்.

Tags : state ,Haryana ,actress ,BJP ,gun robbery , Haryana, BJP executive, home jewelery, gun robbery
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...