திருப்பத்தூரில் அமமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை; காரணம் என்ன?: போலீசார் விசாரணை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வானவராயன். இவர் திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாணவர் அணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை வானவராயன், பணவசூலுக்கு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். வசூல் முடிந்து, பூங்காவனத்தம்மன் கோயில் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர், அவரை மறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டினர்.

இதை பார்த்த வானவராயன், அங்கிருந்து தப்பியோடி முயன்றார். ஆனால் அவர்கள், அவரை விரட்டி சென்று சரமாரியாக தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வானவராயன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பவிட்டனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வானவராயன் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா, அரசியல் உள்நோக்கமா, கள்ளக்காதல் விவகாரமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வானவராயனை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. அந்த கும்பலே தற்போது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட வானவராயனுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>