×

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் குளம் போல கழிவுநீர் தேக்கம்: பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, தேக்கம்பட்டியில் ஊரின் மையப்பகுதியில் குளம்போல கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, வாறுகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேற போதிய வாறுகால் வசதி இல்லாததால், கிராமத்தின் மையப்பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.

இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறுவர்களை விளையாடுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, தேக்கம்பட்டியில் கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், ‘தேக்கம்பட்டியில் ஊரின் மையப்பகுதியில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. சிறுவர்கள் விளையாடுவதற்கும் அச்சப்படுகின்றனர். கழிவுநீர் வாறுகால் அமைத்து தரக்கோரி பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் வாறுகால் அமைத்து கொடுத்து, தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Tags : pond ,public ,Thekkampatti ,Andipatti , Sewage stagnation like a pond at Thekkampatti near Andipatti: Sanitation to the public
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...