×

மத்தியப் பிரதேசத்தில் நெஞ்சை பிளக்கும் சோகம்.. 54 பயணிகளுடன் கால்வாயில் விழுந்த பேருந்து.. 32 பேர் பலி.. 7 பேர் உயிருடன் மீட்பு!!

போபால் : மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன பயணிகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.   மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பாட்னா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய
கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் பேருந்து தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதால் மீதமுள்ள 15 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகளை வெள்ளம் அடித்துச் சென்று இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அடித்து செல்லப்பட்ட பயணிகளை படகுகள் மூலம் மீட்புப் படையினர் தேதி வருகின்றனர்.இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்த முழு விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பேருந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Tags : Madhya Pradesh ,canal ,passengers , Madhya Pradesh Canal, bus
× RELATED விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த...