×

நீதிபதிகள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: நீதிபதிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுயை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தன்னை ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதியும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி அவர் ஒய்வு பெற்றார்.

இவர் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்ப பெண்கள், பெண் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags : Karnan ,judges ,Chennai iCourt , Judge, defamatory, speaking V, Karna's petition, dismissed
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...