ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி... ஆளுநர் கிரண்பேடியும் தொடர்ந்து தொல்லை.. புதுச்சேரி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு!!

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்ததால் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ்  அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் உள்ளது.இதனால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது.

இந்த நிலையில் புதுச்சேரி நலத்துறை அமைச்சர் கந்தசாமி கூறியதாவது, மத்திய பாஜக அரசும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆளும் பாஜ அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலமாக மாநில உரிமைகளை தடுத்து நிறுத்தி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தலைமை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கிறது. புதுச்சேரிக்கு நாளை ராகுல்காந்தி வருகிறார். இதற்காக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் புதுச்சேரி வந்துள்ளார்.

இன்று அவரை அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சந்தித்து பேச இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் மெஜாரிட்டியை இழந்து இருக்கிறோம்.ஆட்சியை கவிழ்க்க முயலும் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய இருக்கிறோம். மத்தியில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது. வரும் தேர்தலில் பாஜகவின் இந்த அராஜக, அடாவடி செயலுக்கு புதுச்சேரி மக்கள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுவர், என தெரிவித்தார்.

Related Stories:

>