×

ஆஸ்ட்ராஸேனகாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது உலக சுகாதார அமைப்பு..பராமரிப்பு எளிது என்ற விஞ்ஞானிகள் கருத்தை ஏற்று அனுமதி!!

ஜெனீவா : தடுப்பூசி பயன்படுத்தும் நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர தொடங்கியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஸேனகா உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசரக்காலத்திற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா கொல்லூயிரியை கட்டுக்குள் கொண்டும் வரும் விதமாக பல்வேறு நாடுகள் பைசர் மற்றும்  ஆஸ்ட்ராஸேனகா தயாரித்துள்ள தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர்.ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்து இருந்தது.

இந்த நிலையில்,  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்- ஆஸ்ட்ராஸேனகா இணைந்து தயாரித்துள்ள கொரோனா  தடுப்பூசியும் உலகளவில் கவனத்தை பெற்றது. இந்த தடுப்பூசி மருந்தினை பராமரிப்பது எளிது என்பதால் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு பெரிதும் பயனாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஸேனகா நிறுவனத்தின் தடுப்பூசியையும் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. அவர் பதவியேற்ற போது, ஆள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வந்தனர். ஆனால் பைடனின் 100 நாள் செயல் திட்டம் எதிரொலியாக கொரோனா தினசரி தொற்று படிப்படியாக குறைந்து தற்போது 60 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : World Health Organization ,AstraZeneca , AstraZeneca, Corona, Vaccine, World Health Organization
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...