×

2009-ல் நடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும்!: ஐகோர்ட் தீர்ப்பு..!!

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. பணப்பட்டுவாடு நடைபெற்றுள்ளது. முறைகேடாக ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார் என குற்றம்சாட்டி 2009ம் ஆண்டே ராஜகண்ணப்பன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையும் அவ்வபோது நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது இருதரப்பும் நேரில் ஆஜராகி சாட்சியங்களையும், வாக்குமூலங்களையும் அளித்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணன், கடந்த அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம், 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். ப.சிதம்பரம் வெற்றிபெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே ப.சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும் என தெரிவித்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : P. Chidambaram ,victory ,constituency ,elections ,Sivagangai ,Lok Sabha ,ICC , 2009, Lok Sabha Election, Sivagangai, P. Chidambaram, Victory, ICC
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...