×

குறையும் கொரோனா பாதிப்பு: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10.96 கோடியை தாண்டியது: 24.18 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,418,014 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 109,664,147 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84,184,886 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 97,700 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.96 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 10,96,65,792 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,41,95,639பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 18 ஆயிரத்து 025 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 22,899,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,699 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : deaths , Declining corona vulnerability: Global number of vulnerabilities exceeds 10.96 crore: 24.18 lakh deaths
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...