×

தயாரிப்பாளர் துரையின் மருத்துவ செலவை ரஜினி ஏற்றார்

சென்னை: தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார். பிதாமகன், லூட்டி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இப்போது வறுமையில் வாடுகிறார். சமீபத்தில் இவரது நண்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு, அதனால், கால் எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளார் துரை என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர்கள் சூர்யா, கருணாஸ் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில், துரையிடம் போனில் பேசிய ரஜினி, அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார். ரஜினிக்கு நெருங்கிய வட்டாரம் இந்த தகவலை தெரிவித்தது….

The post தயாரிப்பாளர் துரையின் மருத்துவ செலவை ரஜினி ஏற்றார் appeared first on Dinakaran.

Tags : Rajini ,V.S. PA ,Rajinikanth ,Luti ,Kajendra ,Ennamma Eye ,
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!