×

5 ரூபாய்க்கு முட்டையுடன் மதிய உணவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆட்சியைத் தக்க வைக்க பல முயற்சிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் ‘மா’ என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.  ‘ஒரு பிளேட் சாதம், பருப்பு, கூட்டு இவற்றுடன் முட்டை இத்திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு வழங்கப்படும். மா திட்டத்தில் ஒருவருக்கு வழங்கும் உணவுக்கான செலவில் 15 ரூபாய் மானியத்தை அரசு வழங்கும். சுய உதவிக்குழுக்களால் சமைக்கப்படும் இந்த உணவுத்திட்டம் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை செயல்படும். இதற்காக படிப்படியாக மாநிலம் முழுவதும் உணவகங்கள் அமைக்கப்படும்’ என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.



Tags : Lunch with eggs for 5 rupees
× RELATED மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில்...