×

அதிமுகவிலிருந்து அழைப்பு வரும்: ஜி.கே.வாசன் பேட்டி

மதுரை: அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து, அதிகாரபூர்வ அழைப்பு வரும்போது பேசுவோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமாகா, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதிக அளவிலான வளர்ச்சி பணிகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியம் வேண்டும். மீனவர்கள் பிரச்னைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பெட்ரொல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து சுமுகமாக பேசுவோம். அதிமுகவில் இருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரும்போது, பேசுவோம்’’ என்றார்.

Tags : AIADMK ,GK Vasan , Call from AIADMK: Interview with GK Vasan
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...