கால் இறுதியில் நடால்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார்.

4வது சுற்றில் இத்தாலியின் பேபியோ பாக்னினியுடன் (16வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்) 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள் சிட்சிபாஸ் (கிரீஸ்), டானில் மெட்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். கால் இறுதியில் நடால் - சிட்சிபாஸ் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), கரோலினா முச்சோவா (செக்.), ஜெஸ்ஸிகா பெகுலா, ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முன்னேறினர்.

Related Stories: