×

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்: 50 வயது மேற்பட்டோருக்கு அடுத்த 2 வாரத்தில் தடுப்பூசி

புதுடெல்லி: ‘அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்’ என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் 188 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். நேற்று காலை 8 மணி வரை சுகாதார பணியாளர்கள், கள பணியாளர்கள் என மொத்தம் 82 லட்சத்து 85,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 59 லட்சத்து 88,113 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் மருந்தும், 24,561 பேருக்கு 2வது டோஸ் மருந்தும் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Union Minister , Union Minister Harshwardhan Information: Vaccination for over 50s in the next 2 weeks
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...