புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி வழங்கியுள்ளது.  வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரையில் 3,770 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற மெட்ரோ ரயில் நீட்டிப்பு வழித்தடத்தை நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த வழித்தடம் மொத்தம் 8 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கியது. அதில், புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையமும் அடங்கும்.இந்தநிலையில், புதுவண்ணாரப்பேட்டை நிலையத்தில் 13 திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்கல் பிரிவு, பொதுமக்கள் ஆலோசனை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 13 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணியின் மூலம் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>