திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 17 முதல் விண்ணப்பிக்கலாம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான தேதி விவரம் நடைபெற இருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021  புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்பபடிவத்தை தலைமைக் கழகத்தில் 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனு கட்டணம் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்: பொதுத் தொகுதி 25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000.

Related Stories:

>