×

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் 80 வயது வாக்காளர் பட்டியலை கேட்டு திமுக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க வேண்டுமென திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்த நிலையில், தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம் எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு வசதியை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்,  80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : DMK ,hearing ,ICC ,elections ,Assembly , Legislative Election, HighCourt, Inquiry
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...