தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : தமிழகத்தில் சென்னை ,கோவை ,திருச்சி, மதுரையில் தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளது.

வேலுர், திருவாரூர் திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுகை, நாகையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளையும் முன்கள பணியாளர்களாக பதிவு செய்யுமாறு மத்திய குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான பணி தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக  இருக்கின்றனர்.

Related Stories:

>