×

விரக்தியில் தேமுதிக தொண்டர்கள்

தேமுதிக தமிழகத்தில் உருவாகிய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தேமுதிகவின் வாக்கு வங்கி குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்த பல முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவினர். குமரி மாவட்டத்திலும் முக்கிய ெபாறுப்பில் இருந்த நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்றனர். இதனால் குமரியிலும் தேமுதிக கரைய தொடங்கியது.

தற்போது தேமுதிக ெபாருளாளர், கூட்டணியில் போதிய இடம் தரவில்லை என்றால் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என கூறி வருகிறார். குமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் ஒரு சில முக்கிய நிர்வாகிகளே தேமுதிகவில் உள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதற்கு யாரும் விரும்பவில்லை. கூட்டணியில் குமரி மாவட்டத்தில் ெதாகுதி ஒதுக்கீடு செய்தால் போட்டியிடுவதற்கு தேமுதிக நிர்வாகிகள் விரும்பியுள்ளனர். இருப்பினும் கட்சி மேலிடம் என்ன முடிவு செய்ய போகிறது என தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியில் உள்ளனர்.

Tags : Temujin ,volunteers , Frustration, DMDK
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு