×

அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தரமற்ற ரேஷன் பொருட்கள் கொள்முதல்

பொது விநியோக திட்டம் என்பது மக்களுக்கு தேவையான திட்டம் தான். திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட் கூட தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பாராட்டியுள்ளது. ஆனால், தற்போது இந்த பொது விநியோக திட்டம் பொதுமக்களுக்கு பயன்படாத திட்டமாக மாறி விட்டது. பயோமெட்ரிக் திட்டம் நகரங்களில் செயல்படுகிறது. ஆனால் கிராமங்களின் நிலையே வேறுமாதிரியாக உள்ளது. அவர்களுக்கு பச்சை அரிசி தான் தருகின்றனர். கிராமங்களில், புழுங்கல் அரிசி வழங்க வேண்டும். அதை தருவதில்லை. அளவும் குறைக்கப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு தர வேண்டும் என்றால் அரை கிலோ தான் தருகின்றனர். மண்ணெணெய் அரை லிட்டர், ஒரு லிட்டர் தான் தருகின்றனர்.

பிரைமரி கார்டு ஹோல்டர், நான் பிரைமரி கார்டு ஹோல்டர் என்று மாற்றி விட்டார்கள். ஏழைகளுக்கு சேர வேண்டிய இந்த திட்டத்தை பணக்காரர்கள் பயன்படும் பொது விநியோக திட்டமாக மாற்றி விட்டனர். ஏழைகளுக்கு தான் இந்த திட்டம் போய் சேர வேண்டும். ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு தருகின்றனர். வருமான வரி அடிப்படையில் மாதம் 1 லட்சம் வாங்குவோருக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. இதனால், அரசு மானியம் வீணாகிறது. ரேஷனில் பொருள் வாங்க வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால், மீதம் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, துவரம்பருப்பு இலவசமாக வழங்கலாம்.

இப்போது இருக்கிற பொது விநியோக திட்டத்தை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பச்சை அரிசி, புழுங்கல் அரிசி போடுகின்றனர். அல்லீங் அரிசி, எப்சி அரிசி ஒன்று இருக்கிறது. எப்சி அரிசியை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அல்லீங் அரிசி மற்ற மாவட்டங்களில் இருந்து வருகிறது. அந்த மாதிரி அரிசி சுமாராக உள்ளது. அந்த அரிசியை சமைப்பதற்கு வாங்கவில்லை. அந்த அரிசியை மாடுகளுக்கு தீவனமாகவோ, கடைகளுக்கு தான் தருகின்றனர். சாப்பாட்டிற்கு வாங்கி பயன்படுத்தும் நகர்ப்புற மக்கள் குறைவு.

கிராமத்து மக்கள் புழுங்கல் அரிசி அதிகம் பயன்படுத்துகின்றனர். அங்கு போய் சேருவதில்லை. நகரத்து வாசிகளுக்கு சரியான வரையறையில் கிடைக்கிறது. ஆனால், அரிசியை தரப்படுத்தி கொடுத்தால் தான் தரத்தை மேம்படுத்தி தர வேண்டும். பிஎச்எஸ் அட்டை வைத்திருக்கும் பணக்காரர்கள் கொண்டை கடலை இலவசமாக வாங்கி செல்கின்றனர். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த பிஎச்எஸ் அட்டையில் வரவில்லை. இதை எப்படி அதிகாரிகள் நிர்ணயித்தார்கள் என்றால் அவர்களே குறிப்பிட்ட அட்டையை பிஎச்எஸ், ஏஎச்எஸ், என்பிஎச்எஸ் என்று பிரிக்கின்றனர். அப்படி பிரிக்கும் போது அந்த சலுகையை பணக்காரர்கள் தான் அனுபவிக்கின்றனர். அதை முறைப்படுத்த வேண்டும். பிஎச்எஸ் அட்டைக்கு வருமானம் நிர்ணயிக்க வேண்டும். அதை ரேஷன் கடைக்காரர்களிடம் ஒப்படைத்தால் சரியாக இருக்கும்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் தரமாக இல்லை. அரிசியை தரமாக கொடுத்தால், இப்போது இருப்பதை விட பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படும். பொருட்கள் ஏழைகளுக்கு போய் சேர வேண்டும் என்றால், பணக்காரர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். ரேஷன் கடைகளுக்கும் குடோனில் இருந்து பொருட்களின் அளவு குறைவாகவே வருகிறது. இதற்கு எந்த துறையிலும் பதில் இல்லை. இந்த துறையை 18 துறைகள் ஆய்வு செய்வது வீண் வேலை. சரியான எடையில் பொருட்கள் வரவில்லை என்பது ரேஷன் கடைகளின் பிரச்னை. கோணியெல்லாம் பயங்கர டேமேஜாக இருக்கிறது. இதில், பொருட்களை அடைத்து கொடுப்பதால் பல லட்சம் டன் பொருட்கள் மட்டும் வீணாகி போகிறது. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்த சரியான அரசாங்கம் வர வேண்டும். ஆனால், இப்போது இருக்கும் அரசாங்கத்திற்கு இதை கையாள தெரியவில்லை. இதையெல்லாம் தெரியாமல் தான் இவ்வளவு தவறு நடக்கிறது. வடசென்னையில் அரிசி வாங்கும் அளவுக்கு தென்சென்னையில் இல்லை. இதற்கு தரம் தான் முக்கிய காரணம்.

பொது விநியோக திட்டத்தில் உள்ள கடைகளில் கடந்த 2013ல் காய்கறி விற்பனை செய்தனர். அவர்களே ஒரு சில கடைகளை தேர்வு செய்து இந்த காய்கறி விற்பனையை தொடங்கினார்கள். அந்த கடைக்கு என்ன தேவையோ அதை செய்யாமல் அவர்களாக காய்கறி அனுப்பி விட்டு 10 சதவீதம் கழிவுகள் போக, விற்காமல் உள்ள மிச்ச காய்கறிகளை எடுக்காமல் விட்டு விடுகின்றனர். இதில் ஏற்படும் பல லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை தொழிலாளிகள் மீது போட்டுள்ளனர். அதை நிவர்த்தி செய்ய சொல்லி கேட்டோம். தொழிலாளர்கள் மீது நஷ்டத்தை தள்ளுபடி செய்யுமாறு கேட்டோம். இந்த நஷ்டத்தால் தொழிலாளர்கள் பலர் ஓய்வு பெற முடியாமல் உள்ளனர்.

என்பிஎச்எஸ் என்பது சர்க்கரை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் வழங்கப்பட்ட 2500 வாங்க தகுதி இல்லாதவர்கள். ஆனால் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடைகளை சட்டவிரோதமாக இடைத்தரகர்களாக டெக்னிக்கலாக அரசு மாற்றிவிட்டது. அதாவது என்பிஎச் அட்டையாக அதாவது அரிசி அட்டையாக மாற்றி அவர்களுக்கு 2500 பணத்தை ரேஷன் கடை ஊழியர்களை வைத்தே கொடுக்க வைத்துள்ளது. இவர்கள் அரிசி மற்றும் 2500 வாங்க தகுதியற்றவர்கள். பணம் வழங்கவே, இந்த கார்டுகளில் மாற்றம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இது அதிகமாக தான் உள்ளது.

2,500 பணம் வழங்குவதில் கூட ஆளும் கட்சி தலையீடு அதிகளவில் இருந்தது. ஆளும் கட்சியினரே டோக்கன் கொடுத்தனர். திமுக கோர்ட்டுக்கு போனதால், அந்த நேரத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு தடுக்கப்பட்டது. பொது விநியோக திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்றால், ரேஷன் கடைகளில் 50 சதவீதம் தான் பொருட்கள் நகர்வு இருக்கும். இதை கவனத்தில் கொண்டு சரியான நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், 4 ஆயிரம் கோடி பொருட்களுக்கு மானியமாக ஒதுக்குகிற காலகட்டத்தில் இந்த பொருட்களுக்கு ஒதுக்குவதில் 2 ஆயிரம் கோடி மிச்சப்படும். இந்த மிச்ச பணத்தை தரமான பொருட்கள் கொடுத்து ஏழைகளுக்கு வழங்கலாம். இந்த அரசாங்கத்தில் இது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், எதிர்வரும் அரசாங்கம் இதை செயல்படுத்தலாம்.

ரேஷன் பொருட்கள் தரமாக இல்லாததற்கு கொள்முதல் ெசய்வது தான் காரணம். அதிகாரிகள், அமைச்சர்கள் கமிஷன் என்கிற ஒன்றை கையில் வைத்து கொண்டு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் விளைந்த அல்லீங் அரிசியை தான் வாங்குகின்றனர். அவர்கள் கொள்முதல் செய்யும் போது கையூட்டு, கொள்முதல் செய்ததை அரிசியாக்கும் போது கையூட்டு பெறுகின்றனர். இதனால், அந்த பொருள் தரமில்லாமல் தான் வருகிறது. 50 கிலோ அரிசி மூட்டையில் 47 கிலோ, 48 கிலோ தான் வருகிறது. இதை கேட்க யாரும் இல்லாததால் இப்போது வரை அந்த தவறு நடந்து கொண்டிருக்கிறது.

Tags : Commission ,Ministers , Ministers, officials, ration items, purchases
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க...