அதிமுக ஆட்சியால் எந்த பயனும் இல்லை : ப.சிதம்பரம் பேச்சு

சிவகங்கை:சிவகங்கையில் வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அந்த கணக்கின்படி பார்த்தால் சட்டமன்ற தேர்தலில் 228 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.  இதை செய்ய நம்மால் முடியும். பணபலம், அதிகார பலத்தை வெல்ல கூடிய பலம்தான் மக்கள் பலம். தோல்வி பயத்தால் தினசரி விளம்பரம் வருகிறது.

கடந்த 10 ஆண்டு ஆட்சி செய்த அதிமுக கடைசி 3 மாதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. இதனால் எந்த பயனும் கிடையாது. மக்களை எளிதில் ஏமாற்ற முடியாது. அறிவிப்பு என்பது வேறு  செயல்படுவது என்பது வேறு. விவசாய கடன் ரத்து என்ற அறிவிப்புகள் வந்துள்ளன. மத்திய நிதியமைச்சர் தமிழகத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டங்களுக்காக நிதி எதுவும்  ஒதுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியால் எந்த பயனும் இல்லை. 10 ஆண்டு ஆட்சிக்கு ஓய்வு தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.

Related Stories:

>