×

ஹோப் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை ஐக்கிய அமீரகம் வெளியிட்டது

ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக வெளியிட்டது.<விண்வெளி ஆய்வில் அரபு நாடுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஹோப் விண்கலம், 25ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கடந்த புதன்கிழமை படம் ஒன்றை எடுத்து அனுப்பியிருந்தது.செவ்வாய் கிரகத்தின் வடபுலமும் அந்த கிரகத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்ஸும் அதில் இடம் பெற்றுள்ளது. ஹோப் விண்கலம் 2 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.   


Tags : United States ,spacecraft ,Mars ,Hope , செவ்வாய்
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து