பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூன்றே நாட்களில் செவ்வாயில் தரையிறங்க உள்ளது. ஏறக்குறைய ஏழு மாதங்களில் 300 மில்லியன் மைல்கள் பயணித்துள்ள இந்த ஆய்வூர்தியை, சுமார் 40 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.செவ்வாயின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழைந்ததும் அதனுள் இருக்கும் கோள வடிவிலான அமைப்பான  காப்சூலில் இருந்து பெர்சிவரன்ஸ் தரையைத் தொடுவதற்கு எடுத்துக் கொள்ளும் அந்த 7 நிமிடப் போராட்டம் அந்த ஆய்வூர்தியை வாழ்வா? சாவா என்ற நிலைக்குத் தள்ளி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Related Stories:

>