×

தெ.ஆவுக்கு எதிராக கடைசி டி.20 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

லாகூர்: பாகிஸ்தான்-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்று இரவு லாகூரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.

டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 45 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 85 எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஜாஹித் மக்மூத் 3, முகமது நவாஸ், ஹசன் அலி தலா 2 விக்கெட்  எடுத்தனர். பின்னர்  165 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கேப்டன் பாபர் அசாம் 44, முகமது ரிஸ்வான் 42 ரன் எடுத்தனர். முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதும், முகமது நவாஸ் ஆட்டநாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-1  என தொடரை கைப்பற்றியது.



Tags : Pakistan ,TNA , Pakistan won the last T20 by 4 wickets against TNA
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்