×

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்துக்கு காந்தியின் பேத்தி நேரில் சென்று ஆதரவு

புதுடெல்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி வந்தார். விவசாயிகளின்  போராட்டத்துக்கு தாரா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதாக பாரதிய கிசான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியின் பேத்தி தாரா காந்திக்கு தற்போது 84 வயதாகிறது. தற்போது தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் பொறுப்பில் தாரா காந்தி உள்ளார். விவசாயிகள் அமைதிவழியில் போராட்டம் நடத்த  வேண்டுமெனவும், விவசாயிகளின் பிரச்னைகளை அரசு தீர்க்க வேண்டுமெனவும் தாரா காந்தி வலியுறுத்தியுள்ளார். இவருடன், காந்தி ஸ்மாரக் நிதி தலைவர் ராமசந்திரா ராஜி, அனைத்திந்திய சர்வ சேவா  சங்க நிர்வாகி அசோக் சரண், காந்தி ஸ்மாரக் நிதி இயக்குநர் சஞ்சய் சிங்கா, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை ஆகியோரும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.

அப்போது தாரா காந்தி கூறுகையில், ‘அரசிய காரணத்துக்காக நாங்கள் இங்கே வரவில்லை. நம் வாழ்நாள் முழுவதும் உணவளித்த விவசாயிகளுக்காக வந்திருக்கிறோம். விவசாயிகளின் கடின உழைப்பு  பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. விவசாயிகளின் நலனே நாட்டின் நலன்’ என்றார்.


Tags : Gandhi ,granddaughter ,Kashipur , காந்தி
× RELATED சொல்லிட்டாங்க…