தஞ்சாவூரில் குரங்குகள் தூக்கிச் சென்ற குழந்தை உயிரிழந்த விவகாரம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குரங்குகள் தூக்கிச் சென்ற குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா- புவனேஸ்வரி தம்பதிக்கு ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

புவனேஸ்வரி தனது இரு குழந்தைகளையும் வீட்டின் நடுவில் படுக்க வைத்துவிட்டு, இயற்கை உபாதையை கழிப்பதற்கால சென்றுள்ளார். அப்போது குரங்குகள் வீட்டுக்குள் புகுந்த இரு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்றுள்ளது. ஒரு குழந்தையைக் குரங்கு குளத்தில் வீசியதால் இறந்ததாகவும், உறவினர்கள் சத்தம் போட்டதால் மற்றொரு குழந்தையைக் கீழே போட்டுவிட்டுச் குரங்கு சென்றதால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தஞ்சாவூர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளுக்கு பிடித்தமான உணவுகளை கூண்டுக்குள் வைத்து பிடித்து வருகின்றனர். இதுவரை 25 குரங்குகள் பிடித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பிடிபட்ட குரங்குகளை பச்சைமலை காட்டில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>