×

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: 15.02.2021 முதல் 17.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 18.02.2021 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யாக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19.02.2021 அன்று தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளனர். மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவு எங்கும் ஏற்படவில்லை என்று வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Karaikal ,Puthuvai , The next two days will be mostly dry in Tamil Nadu, Puthuvai and Karaikal
× RELATED தமிழக பகுதிக்கு கடத்த இருந்த ₹40ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்