×

வாங்கப்பாளையம் வளைவு பாதையில் வாகனங்களுக்கு இடையூறாக மினி பஸ்கள் நிறுத்தம்

கரூர் : கரூர் வாங்கப்பாளையம் வளைவு பாதையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது மினி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.கரூர் வெங்கமேடு மண்மங்கலம் சாலையில் குறிப்பிட்ட தூரம் சென்றதும் வாங்கப்பாளையம், அரசு காலனி போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. வெங்கமேடு வழியாக இந்த பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவ்வப்போது வாங்கப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில் பேரூந்துகள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் இந்த சாலைகளின் வழியாக எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த பிரிவுச் சாலையோரம் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்துவதை கண்காணித்து தேவையான சீரமைப்புகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wangapalayam , Karur: Occasional minibuses ply on the Karur-Wangapalayam curve, disrupting other vehicles.
× RELATED வடிகால் அடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் ஓடி சுகாதார கேடு