×

வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட எஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரம்

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் வாய்மேடு, மருதூர், தென்னடார், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஹெட்டரில் சம்பா சாகுபடி நடைபெற்றது. கடந்த மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமானது. இந்த நிலையில் தற்போது தண்ணீர் வற்றி வருவதால் அறுவடை இயந்திரங்களை கொண்டும், ஆட்களை கொண்டு அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மழையால் சேதமடைந்து சாய்ந்த பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்களை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யமுடியாத சூழ்நிலை இருப்பதால் ஆட்கள் மூலம் அறுவடை செய்து, அடித்து தூற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள் சேறும், சகதியுமாக உள்ளதால் அறுவடை இயந்திரங்கள் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலையில் ஆட்கள் மூலம் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆட்களைக் கொண்டு அறுவடை செய்வதால் அதிக செலவு ஆவதாகவும் ஏற்கனவே மகசூல் பாதிக்கப்பட்டு பெருத்த நஷ்டம் ஆன நிலையில் எஞ்சிய பயிர்களையும் ஆட்களை வைத்து அறுவடை செய்வதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் இந்த ஆண்டு விவசாயத்தில் பெருத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளோம் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags : Vedaranyam , Vedaranyam: Vaimedu, Marudur, Tennadar in Vedaranyam taluka of Naga district
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்