பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக: மறைமுக தேர்தலில் அமமுக, தேமுதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுகவின் தங்கவேலு தேர்வு

தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் 16 வார்டுகளில் தி.மு.க.,-8, அ.தி.மு.க.,-6, தே.மு.தி.க., அ.ம.மு.க., தலா 1 கவுன்சிலர்கள் என வெற்றி பெற்றனர். தி.மு.க. பெரும்பான்மை வெற்றி பெற்று ஒன்றிய தலைவர் பதவிக்கு 7 வது வார்டு தங்கவேல், 8 வது வார்டு செல்வம் போட்டியிட்டனர். உடன்பாடு ஏற்படாததால் செல்வம் அதிருப்தி அடைந்து அ.தி.மு.க.விற்கு தாவினர். இந்நிலையில் தே.மு.தி.க. கவுன்சிலர் அ.தி.மு.க.,விற்கும், அ.ம.மு.க. கவுன்சிலர் தி.மு.க.விற்கும் ஆதரவு அளித்தனர். இரு கட்சிகளும் சம பலத்தில் இருந்தன.

தலைவர் தேர்தலின் போது ஒரு தரப்பு புறக்கணிப்பால் தேர்வு நடத்த முடியாமல் ஒரு ஆண்டாக நீடித்தது. ஒன்றிய தலைவர் தேர்தல் நடத்த கோரி தி.மு.க. கவுன்சிலர் தங்கவேல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப். 15க்குள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒன்றிய தலைவர் தேர்தலுக்கு 3 முறை நாள் குறித்தும் நடத்த முடியாத நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடத்தப்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் நிலுவையிலிருந்த ஒன்றிய தலைவர் தேர்தலை சார் ஆட்சியர் சினேகா நடத்தினார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வாக்குகளில் 9 வாக்குகள் பெற்று தங்கவேலு வெற்றி பெற்றுள்ளார். மறைமுக தேர்தலில் அமமுக, தேமுதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுகவின் தங்கவேலு தலைவரானார்.

Related Stories:

>