சீர்காழி இரட்டை கொலை-கொள்ளை சம்பவம்: என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் சிபிசிஐடி அதிகாரி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை-கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி(50)  தருமகுளம் கிராமத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஜனவரி 27-ம் தேதி நகை வியாபாரி வீட்டில் தாய், மகன் என இருவரை கொலை செய்துவிட்டு 12 கிலோ தங்கம் கொள்ளையடித்து சென்றனர்.  தப்பியோடிய கொள்ளையர்களை எருக்கூர் அருகே போலீசார் பிடித்தனர். அப்போது, போலீசாரை தாக்கிய கொள்ளையன் மஹிபால், சுட்டு கொல்லப்பட்டான். ஜெயங்கொண்டத்தில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலம் தோஜ்காப்பூரை சேர்ந்த பட்டேல்ராம் மகன் மணீஷ்(23), ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியைச் சேர்ந்த ஜெகராம் மகன் ரமேஷ் பாட்டில்(27). ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கருணாராம் என்ற கொள்ளையனை, கும்பகோணத்தில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மஹிபால் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ஜெகதீசன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனையடுத்து இந்த என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தற்போது சிபிசிஐடி அதிகாரி எஸ்.பி ரவி என்பவர் சம்பவ நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

More
>