×

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆஃப்ரிக்காவில் மீண்டும் வெடித்து கிளம்பும் எபோலா கொல்லுயிரி!: 4 பேர் பலியானதால் பதற்றம்..!!

கினியா: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆஃப்ரிக்க நாடுகள் போராடி வரும் நிலையில் மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினியாவில் மீண்டும்  எபோலா கொல்லுயிரி பரவ தொடங்கியிருக்கிறது. கடந்த 2014 - 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆஃப்ரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியாரா லியோனின் பரவிய எபோலா கிருமி, 11300 உயிர்களை பறித்துச் சென்றது. தொடர்ந்து, தடுப்பூசி மருந்து மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எபோலா தற்போது மீண்டும் வெடித்து கிளம்ப தொடங்கியுள்ளது. கினியாவில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து அவர்களது ரத்த மாதிரிகளை சோதனையிட்ட மருத்துவர்கள், அவர்கள் எபோலா கிருமியின் பாதிப்பால் உயிரிழந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, எபோலா கிருமி மீண்டும் பரவி வருவதை அறிந்து அனைவரும் அச்சத்தில் இருக்கின்றோம். 2013ம் ஆண்டு இங்கு வெடித்து கிளம்பிய எபோலா கினியா, சியாரா லியோன், லைபீரியா நாடுகளை புரட்டிப்போட்டது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே கொரோனா பரவலால் ஆஃப்ரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எபோலா தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என குறிப்பிட்டார். பலியானவர்களின் உறவினர்களுக்கு சுகாதாரத்துறையினர் நடத்திய மருத்துவ பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு எபோலா கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கௌகோ என்ற இடத்தில் நடைபெற்ற இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு எபோலா தாக்குதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு விரைந்துள்ள மருத்துவர்கள் அறிகுறிகள் உள்ளோரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தான் காங்கோ நாட்டில் எபோலா தாக்கம் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது கினியாவில் மீண்டும் எபோலா கிருமி பரவ தொடங்கியிருப்பது ஆஃப்ரிக்க நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Ebola outbreak ,Africa , Africa, Ebola virus kills 4
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்