எனது தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

டெல்லி: எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தெரியவித்துளார். தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி நேற்று காலை சென்னை வந்தார். காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காலை 10.40 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு விமானபடை தளத்துக்கு வந்தார்.

அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு, விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அவர் பயணம் செய்த பாதையான தலைமை செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு ஆகிய 5 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு மேளம், நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் பிரதமர் வரும் சாலை முழுவதும் அதிமுக, பாஜ தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் நின்றிருந்த கட்சியினர்,

பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். 11.30 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலானதிட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில், எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்றும், நேற்று நடைபெற்ற சிறப்பு அம்சங்களை இதோ பாருங்கள் என வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>